ஹீரோ படத்தில் நடித்த அந்த பொண்ணா இது?…. ஆள் இப்படி இருக்காங்களே….. போட்டோவை பார்த்து வாயடைத்துப் போன ரசிகர்கள்….!!!

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகைகளாக திரையுலகை கலக்கி வந்த நடிகைகள் பலரும் இன்று காணாமல் போய்விட்டன. அன்று முதல் இன்று வரை ஏதோ ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்து அதன் பிறகு காணாமல் போன நடிகைகள் ஏராளம். அந்த வரிசையில் நடிகை இவானாவும் ஒருவர். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு தமிழில் பாலா இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான நாச்சியார் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார்.

சில குறிப்பிட்ட நடிகர்கள் மட்டுமே நடித்த நாச்சியார் திரைப்படத்தில் ஜிவி பிரகாசுக்கு ஜோடியாக நடித்தவர் தான் நடிகை இவானா. கேரளாவில் பிறந்த இவரின் உண்மையான பெயர் அலினா ஷாஜி. முதலில் கேரள மொழி படங்களில் துணை நடிகையாக நடித்து வந்த இவர் நாச்சியார் திரைப்படத்தில் பார்ப்பதற்கு ஒரு பட்டிக்காட்டு பெண்ணாக நடித்திருந்தார். அப்படி ஒரு கேரக்டரில் நடித்திருந்த இவர் உண்மையிலேயே ஒரு மாடர்ன் ஆன பெண். இவர் நிஜ வாழ்க்கையில் மார்டன் டீன் ஏஜ் பெண்ணாக தோற்றமளிக்கிறார்.

நாச்சியார் திரைப்படத்திற்கு பிறகு இவருக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் எதுவும் அவ்வளவு கிடைக்காததால் மிகப்பெரிய இடைவேளைக்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஹீரோ திரைப்படத்தில் வாய்ப்பு கிடைத்தது. அதில் மதி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார். ஆனால் நாச்சியார் திரைப்படத்தில் நடித்த நடிகை தான் இவர் என்பது பலருக்கும் தெரியாது.

அதுமட்டுமல்லாமல் இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான மாஸ்டர் என்ற மலையாள திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாகவும் நடித்துள்ளார்.அதனைத் தொடர்ந்து பல மலையாள திரைப்படங்களில் குழந்தை கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் தற்போது தமிழில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருக்கிறார்.இறுதியாக வெளியான ஹீரோ திரைப்படத்திற்கு பிறகு இவர் எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்கவில்லை.

ஹீரோ திரைப்படத்தை தொடர்ந்து லவ் டுடே என்ற படத்தில் இவர் கமிட்டான நிலையில் படம் தொடர்பான அறிவிப்பு எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை.இதனிடையே சமூக வலைத்தளங்களில் எப்போதுமே ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்களை இணையத்தில் பகிர்வது வழக்கம்.அவ்வகையில் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மார்டன் உடையில் இருக்கும் சில புகைப்படங்களை அவர் பகிர்ந்து உள்ள நிலையில் அதனைப் பார்த்து ரசிகர்கள் பலரும் ஹீரோ படத்தில் நடித்த பெண்ணா இது என்று வாயடைத்து புகைப்படங்களை இணையத்தில் வைரல் ஆக்கி வருகிறார்கள்.