தமிழ் சினிமாவில் இன்றளவும் சூப்பர் ஸ்டார் என்று அறியப்படும் ரஜினிகாந்த் முன்னணி நடிகராக வலம் வருகிறார். பல படங்களில் வில்லனாகவும் பல படங்களில் ஹீரோவாகவும் அசத்தியிருப்பார். நடிப்பில் இவரை அடித்துக் கொள்ள ஆளே கிடையாது. கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகராக வலம் வருகிறார்.

இவரின் படங்கள் ஏதாவது திரையில் வெளியாகிறது என்றால் ரசிகர்கள் கூட்டம் அலைமோதும். தற்போது இருக்கும் இளம் நடிகைகள் அனைவரும் ரஜினியுடன் ஏதாவது ஒரு படத்தில் நடித்துவிட வேண்டுமென்று மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். அன்றைய காலகட்டத்தில் அனைத்து நடிகைகளுடனும் இவர் நடித்துள்ளார். இன்றைய இளம் நடிகைகள் சிலரும் ரஜினியுடன் சில திரைப்படங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் 1983 முதல் தற்போது வரை பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை ஒருவர் இதுவரை ரஜினியுடன் ஒரு படம் கூட நடிக்கவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. அந்த நடிகை ஊர்வசி தான். தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக தன்னுடைய நடிப்பால் அனைவரையும் கட்டி போட்டவர் இவர். அனைத்து படங்களுமே ஹிட் கொடுத்துள்ளன.

இவர் நடிக்கும் பெரும்பாலான படங்கள் காமெடி கலந்திருப்பதால் ரசிகர்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றன. இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் வீட்டில விசேஷம் . அதில் தனது நடிப்பை அற்புதமாக இவர் வெளிப்படுத்தி இருப்பார். இந்நிலையில் ரஜினியும் இவரும் இணைந்து ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை என்பது ஆச்சரியம் அளிக்கிறது. அந்த காலகட்டத்தில் ஏன் தயாரிப்பாளர்கள் இதனை யோசிக்கவில்லை என்று ரசிகர்கள் வருந்துகின்றனர்.
