“எங்களுக்குள்ள செட் ஆகல”…. திடீரென விவாகரத்தை அறிவித்த தமிழ் பிக்பாஸ் பிரபலம்….. அவரே சொன்ன காரணம்…..!!!!

விஜய் டிவியில் பல ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பாகி வந்தாலும், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தனியாக ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது என்று கூறலாம். அவ்வளவு விறுவிறுப்பான நிகழ்ச்சி இது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் சர்ச்சையில் சிக்குவதை ரசிப்பதற்கு ஒரு பெரிய கூட்டம் உள்ளது என்றால் மறுபக்கம் கமல்ஹாசன் தொகுத்து வழங்குவதை பார்ப்பதற்கு ஒரு பெரிய பட்டாளமும் உள்ளது. தற்போது வரை ஐந்து சீசன்கள் முடிந்துள்ள நிலையில் விரைவில் சீசன் ஆறு ஆரம்பமாக உள்ளது.

இதனிடையே பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கியவர் தான் ஆர் ஜே வைஷ்ணவி. ரேடியோ ஜாக்கியாக பணியாற்றி வந்த இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மிகவும் பிரபலமானார். இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு அஞ்சான் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

மூன்று வருடங்கள் காதலித்து அதன் பிறகு கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவர்கள் ஆறு வருடங்கள் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் இவர்கள் திடீரென விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளனர். இது குறித்து வைஷ்ணவி கூறுகையில், ஆறு வருடங்களுக்கு மேல் நாங்கள் ஒன்றாக வாழ்ந்து வந்தோம். தற்போது இருவரும் பிரிவதாக முடிவு செய்துள்ளோம்.

எங்கள் உறவில் அழுத்தம் இல்லாமல் நாங்கள் நாங்களாக இருக்க பிரிவதே சிறப்பானது என நீண்ட ஆலோசனைக்கு பிறகு நாங்கள் முடிவு செய்துள்ளோம். விவாகரத்திற்கு பிறகு நாங்கள் இருவரும் நண்பர்களாக இருப்பதே சிறப்பு என்பதை உணர இத்தனை வருடங்கள் ஆனது.

என்ன நடந்திருக்கும் என்று யாரும் யூகிக்க வேண்டாம். நாங்கள் இருவரும் பிரிவதில் எங்களுக்கு வருத்தம் இல்லை. தம்பதிகளாக இருப்பதை விட நண்பர்களாக இருப்பதுதான் சிறந்தது என்று அவர் பதிவிட்டுள்ளார். இந்தச் செய்தி தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.