திடீரென சம்பளத்தை குறைத்த ரஜினிகாந்த்…. அதுவும் இத்தனை கோடியா?…. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…….!!!!

தமிழ் சினிமாவில் இன்றும் முன்னணி நடிகராக வலம் வருபவர் என்றால் அவர் ரஜினி தான்.சூப்பர் ஸ்டார் என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் இவர் நடித்துள்ள பெரும்பாலான படங்கள் ஹிட் கொடுத்துள்ளனர். அந்த அளவிற்கு ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தவர்.

இவரின் நடிப்பில் அண்மையில் வெளியான அண்ணாத்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. அவருக்கு வயதானாலும் அவரின் நடிப்பிற்கு இன்னும் வயதாகவில்லை. அப்போது இருந்த அதே ஸ்டைலில் இன்றளவும் கலக்கி வருகிறார்.

இந்நிலையில் இறுதியாக நடித்த அண்ணாத்து திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் ரஜினி இயக்குனர் நெல்சன் திலிப் குமார் இயக்கும் ஜெயிலர் திரைப்படத்தில் இணைந்துள்ளார். இந்த திரைப்படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், ரம்யா கிருஷ்ணன்,கே எஸ் ரவிக்குமார் போன்ற முன்னணி நடிகர்கள் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

டிரெய்லர்  படத்தின் அறிவிப்பு வெளியாகி பல மாதங்கள் ஆகியுள்ள நிலையிலும் படப்பிடிப்பு தொடங்காமல் இருப்பதாக ரசிகர்கள் கவலை தெரிவித்தனர். தற்போது ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை ரஜினியும் உறுதிப்படுத்தி உள்ளார்.

இந்நிலையில் ரஜினிகாந்த் கடந்த சில நாட்களாக நடித்த சில படங்கள் வெற்றி பெறாத நிலையில் தனது அடுத்த படமான ஜெயிலுக்கு அவர் சம்பளத்தை குறைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.