38 வயதாகியும் சிங்கிளாக இருக்கும் ஜெயம் பட நடிகை…. இப்போ என்ன செய்றாங்க தெரியுமா?…. வைரல் புகைப்படம்…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் தான் நடிகை சதா.தெலுங்கு மற்றும் கன்னட மொழி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். தமிழில் ஜெயம் திரைப்படம் மூலம் ஹீரோயினியாக அறிமுகமான நிலையில் இவரின் முதல் படமே நல்ல வாய்ப்பை தேடி தந்தது. அதனால் இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தன. அவ்வகையில் எதிரி, வர்ணஜாலம்,அந்நியன் மற்றும் திருப்பதி உள்ளிட்ட பல படங்களில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

அதன் பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் பல வருடங்களுக்குப் பிறகு டார்ச் லைட் என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சினிமாவை விட்டு சற்று விலகி இருந்தாலும் சமூக வலைத்தளங்களில் எப்போதுமே ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வபோது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது வழக்கம்.

தற்போது இவர் தனது உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்து வாய்ப்பிற்காக காத்திருந்தோம் யாரும் கண்டு கொள்ளாமல் இருக்கின்றன.இந்நிலையில் போட்டோகிராபி பக்கம் சென்ற சதா காடுகளுக்குச் சென்று விலங்குகளை புகைப்படம் எடுக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

அது மட்டுமல்லாமல் தெலுங்கு சினிமாவில் AHIMSH என்ற திரைப்படத்தில் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் சதா நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.