விஜய் டிவியில் இன்றளவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் முக்கிய நிகழ்ச்சி தான் சூப்பர் சிங்கர். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பலரும் இன்று மக்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ளனர். அவ்வாறு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்ற இசையமைக்கும் மணி இசை குழுவில் பியானோ வாசிக்கும் இசை கலைஞரான கார்த்திக் தேவராஜ் மிகவும் பிரபலமடைந்தவர்.

சூப்பர் சிங்கர் மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானவர் இவர். அண்மையில் இவர் தனது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். இந்நிலையில் அவருக்கு சூப்பர் சிங்கர் போட்டியாளர்களில் ஒருவரான மானசி தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், எனக்கு மிகவும் பிடித்த கார்த்திக் தேவராஜ் அவர்களுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவரிடம் உள்ள நேர்மறை ஆற்றல்களை என்னால் தனிப்பட்ட முறையில் அறிய முடியும். ஏனென்றால் அவரை தனிப்பட்ட முறையில் நான் அறிந்திருக்கிறேன். அதற்காக கடவுளுக்கு நான் மிகவும் நன்றி கூற விரும்புகிறேன். உங்கள் பிறந்த நாளான இன்று நீங்கள் மிகுந்த மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.

இந்த வருடம் நீங்கள் மிகுந்த மகிழ்ச்சியுடனும் சந்தோசமாகவும் இருக்க கடவுள் உங்களுக்கு அருள் புரிவார் என்று அவர் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவு இணையத்தில் வைரலான நிலையில் மானசியை சந்திக்க சென்ற கார்த்திக் தேவராஜ், பியானோ இசைக்கருவி ஒன்றை அவருக்கு பரிசாக வழங்கினார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
View this post on Instagram