விமான பயணியாக வந்த பிரபல ஹாலிவுட் நடிகர்…. திடீரென அவர் செய்த செயலால்…. திகைத்துப் போன பயணிகள்….. வைரல் வீடியோ….!!!!

அமெரிக்காவை சேர்ந்த பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேசன் மோமோ. இவர் நடிப்பில் வெளியான அக்குவா மேன், கேம் ஆஃப் த்ரோன்ஸ் ஆகிய படைப்புகள் மூலமாக ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது என்று கூறலாம்.

அப்படிப்பட்ட இவர் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று ஹவாயில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்றில் பயணித்தார். அப்போது விமானத்தில் பயணித்த பயணிகள் அனைவரும் அவரைக் கண்டு ஆச்சரியம் அடைந்தனர். அதுமட்டுமல்லாமல் அவர் செய்த செயல் அங்கிருந்து அனைவரையும் வியக்க வைத்தது.

அதாவது விமானத்தில் பணியாளராக கையில் தண்ணீர் பாட்டில்களை ஏந்தியபடி அவர் வந்துள்ளார். தனது தலையில் பூ வைத்த படி அவர் வந்ததைக் கண்ட பயணிகள் அனைவரும் திகைத்துப் போனார். அது மட்டுமல்லாமல் விமானத்தில் பயணித்த அனைவருக்கும் தண்ணீர் பாட்டில்களை அவர் வழங்கியுள்ளார்.

அவர் தண்ணீர் பாட்டில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் நிலையில், விமான பயணிகளுக்கு வழங்கியது அவருடைய நிறுவனத்தின் தண்ணீர் பாட்டில்கள் என கூறப்படுகிறது. மேலும் விமானத்தில் பயணித்த அனைவருக்கும் 10 ஆயிரம் மையில் இலவசமாக பயணிப்பதற்கான அறிவிப்பையும் அவர் வழங்கியதாக கூறப்படுகிறது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகிறது.