திடீரென புதிய ஹேர் ஸ்டைலுக்கு மாறிய லாஸ்லியா…. ஆளே அடையாளம் தெரியாம மாறீட்டாங்களே?…. நியூ கிளிக்ஸ்….!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 என்ற நிகழ்ச்சி மூலமாக தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை லாஸ்லியா. அதன் பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. தற்போது பல படங்களில் கதாநாயகியாக நடிக்க கமிட்டாகி உள்ளார். முதலில் அறிமுகப்படமான நடிகர் அர்ஜுனுடன் இணைந்து friendship என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

அதன் பிறகு சமீபத்தில் வெளியான கூகுள் குட்டப்பா என்ற திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார். இதனைத் தவிர தற்போது மூன்று திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். படங்கள் மட்டுமல்லாமல் அவ்வப்போது விளம்பரங்களிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது வழக்கம்.

அவ்வகையில் தற்போது தன்னுடைய புதிய ஹேர் ஸ்டைலில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை அவர் பதிவு செய்துள்ள நிலையில் அது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அந்தப் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.