மேடையை அதிர வைத்த லிடியன்…. மெய்சிலிர்த்துப் போன ரஜினி…. இணையத்தை கலக்கும் வீடியோ….!!!!

சென்னை 44ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரியில் உள்ள போர் பாயிண்ட் நட்சத்திர விடுதியில் நடைபெறுகிறது. நேற்று தொடங்கிய இந்த போட்டி ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான தொடக்க விழா நேற்று சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்தது. பிரம்மாண்ட ஏற்பாடுகளுடன் பலரையும் வியக்க வைக்கும் வகையில் விழா நடைபெற்றது.

அந்த விழாவின் தொடக்க நிகழ்ச்சியில் தமிழர்களின் பாரம்பரியத்தை வெளிக்காட்டும் வகையில் பலர் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. அதன்படி முதலில் நடைபெற்ற மணல் ஓவியத்தில் இருந்து வரிசையாக பல்வேறு கலை நிகழ்ச்சிகள் அரங்கேறின. பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உட்பட நடிகர்கள் என பலரும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் மேடையில் லீடியன் பியானோ வாசித்து அசத்தினார். தொடக்கத்தில் லிடியன் கண்ணை கட்டி நாதஸ்வரம் வாசித்தார். அதன் பிறகு இரண்டு கைகளிலும் ஒரே நேரத்தில் இரண்டு பியானோ வாசித்தார். அவர் வாசிப்பதை பார்த்து அங்கு அமர்ந்து இருந்தவர்கள் அனைவரும் மெய்சிலிர்த்து போனார்கள். ரஜினி மற்றும் கார்த்திக் ஆகியோரும் இதனை பார்த்து வியந்து போனார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பலரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது.