மின்னல் வேகத்தில் குத்தாட்டம் போட்ட குட்டி ராதிகா…. திடீரென என்ன நடந்தது தெரியுமா?…. ரசிகர்கள் ஷாக்…..!!!!!

கடந்த 2003 ஆம் ஆண்டு எஸ்பி ஜனநாதன் இயக்கத்தில் வெளியான இயற்கை திரைப்படத்தில் ஹீரோயினியாக நடித்தவர் கன்னட நடிகை குட்டி ராதிகா. அந்தப் படத்தில் தனது நடிப்பை அற்புதமாக வெளிப்படுத்தி இருப்பார். அதன் பிறகு சில படங்களில் நடித்த அவர் சினிமாவை விட்டு விலகி இருந்தார். கன்னட மொழியில் தன்னுடைய நடிப்பு பயணத்தை தொடங்கினார்.

அதன் பிறகு பல முன்னணி நடிகர்களுடன் இவர் நடித்த படங்கள் அனைத்தும் வெற்றி கண்டன. பின்னர் ரதன் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவர் எதிர்பாராத விதமாக மாரடைப்பில் உயிரிழந்ததால் கடந்த 2010 ஆம் ஆண்டு கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் குமாரசாமியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஷாமிகா என்ற மகளும் உள்ளார்.

திருமணத்திற்குப் பிறகு சினிமா பக்கம் வராத குட்டி ராதிகா கடந்த 2019 ஆம் ஆண்டு மீண்டும் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். நல்ல கதை அம்சம் கொண்ட திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார். அதன் பிறகு சில தவிர்க்க முடியாத காரணங்களால் சினிமாவை விட்டு விலகிய அவர் அவ்வபோது சில வீடியோக்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறார்.

அவ்வகையில் அவர் டான்ஸ் ஆடும் வீடியோ ஒன்று அண்மையில் வெளியானது. நடனப் பயிற்சியில் பாடல் ஒன்றுக்கு மிக வேகமாக குத்தாட்டம் போடும் அவர் கடைசி ஸ்டெப் போடும்போது எதிர்பாராத விதமாக வலிக்கு கீழே விழுந்தார். அதில் அவருக்கு பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் நடனம் ஆடும் போது கவனம் தேவை என்று ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Radhika kumaraswamy இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@radhikakumaraswamy)