தனுஷ் படத்துக்காக இத பேசி தான் செலக்ட் ஆனேன்….. முதல்முறையாக மனம் திறந்த ஐஸ்வர்யா ராஜேஷ்…. ரசிகர்கள் ஷாக்….!!!!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் ஏழு வருடங்களுக்கு முன்பே காக்கா முட்டை திரைப்படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். அதனைத் தொடர்ந்து அவர் நடித்த கனா திரைப்படம் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.

தொகுப்பாளராக மீடியாவிற்குள் நுழைந்த ஐஸ்வர்யா ராஜேஷ் பல அவமானங்கள் மற்றும் கடின உழைப்பை கடந்து இன்று முன்னணி நடிகையாக வளம் வருகிறார். இவரின் நடிப்பில் வெளியான பெரும்பாலான படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

கிளாமரை காட்டாமல் நல்ல குடும்பப் பெண்ணாக படங்களில் நடித்து வருவதால் ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தார். இவரின் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் வடசென்னை. அந்தப் படத்தில் இவரின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. இந்நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் வடசென்னை படத்தில் நடிப்பதற்கு கெட்ட வார்த்தை பேசி தான் ஒப்பந்தமானேன் என்று மனம் திறந்து பேசி உள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், வடசென்னை படத்துக்கு ஆடிஷன் போயிருந்தேன்.அப்போ வெற்றிமாறன் என்னிடம் தெரிந்த கெட்ட வார்த்தை பேசி திட்டுங்கள் என்றார்.நான் பேசியதை பார்த்ததும் நீதான் படத்தில் ஹீரோயினி என்றார்.உலகத்திலேயே கெட்ட வார்த்தை பேசி செலக்ட் ஆன ஹீரோயின் நானாகத்தான் இருப்பேன் என ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியுள்ளார்.