பிரபல நடிகருடன் காதல்….. விரைவில் பாகுபலி தேவசேனாவுக்கு டும் டும்….. மாப்பிள்ளை யார் தெரியுமா….????

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை அனுஷ்கா. இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள உள்ளிட்ட தென்னிந்திய திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக இணைந்து நடித்த இவர் அருந்ததி உள்ளிட்ட பெண் முக்கியத்துவ கதாபாத்திரங்களில் அதிக அளவில் நடித்து வருகின்றார்.

இவருக்கு 40 வயதாகும் நிலையில் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக இருக்கும் இவரின் திருமணம் குறித்து அவ்வபோது இணையத்தில் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளனர். இதனிடையே இவர் நடிகர் பிரபாஸை காதலித்து வருவதாகவும் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியான நிலையில் ஆனால் இதை அவர்கள் உறுதி செய்யவில்லை.

அனுஷ்கா மற்றும் பிரபாஸ் இணைந்து பாகுபலி திரைப்படத்தில் ஜோடியாக நடித்தனர். திரையில் மட்டுமல்லாமல் திரைக்கு வெளியேயும் இவர்கள் ஒன்றாக இருப்பதாக புகைப்படங்கள் வெளியானது. அது மட்டுமல்லாமல் பல திரைப்பட விழாக்களிலும் இவர்கள் ஒன்றாக கலந்து கொண்டனர்.அதனால் இவர்கள் காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் கடந்த வாரம் பிரபாசின் பெரியப்பா நடிகர் கிருஷ்ணன் ராஜு உயிரிழந்தார்.அவர் மருத்துவமனையில் இருந்த போது அனுஷ்கா அவரை சந்திக்க சென்றதாக கூறப்பட்டது.அதுமட்டுமல்லாமல் அனுஷ்கா மற்றும் பிரபாஸ் இருவரும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என கிருஷ்ணன் ராஜு ஆசைப்பட்டுள்ளார். எனவே அனுஷ்கா மற்றும் பிரகாஷ் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல் ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இருந்தாலும் இது குறித்த தகவலை அவர்கள் இருவரும் இதுவரை வெளியிடவில்லை.