தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் சிம்பு. இவரின் நடிப்பில் தற்போது வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இதனைத் தொடர்ந்து பத்து தல படத்தில் சிம்பு நடித்து வருகிறார். இதனிடையே சிலம்பரசனை பார்க்கும் ஒவ்வொருவரும் அவரிடம் கேட்கும் கேள்வி திருமணம் எப்போது என்பதுதான். அண்மையில் அவருக்கு திருமணம் செய்ய குடும்பத்தார் முடிவு செய்திருப்பதாகவும் அதற்காக பெண்பார்த்து வருவதாகவும் இணையத்தில் தகவல் வெளியானது. இருந்தாலும் சிம்புவின் திருமணம் எப்போது என்பது குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.

இதனிடையே சிம்பு நடிப்பில் வெளியாகி உள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக இளம் நடிகை சித்தி இத்னானி நடித்துள்ளார். இவரின் நடிப்பில் வெளியான முதல் தமிழ் திரைப்படம் இதுதான். இப்படத்தில் மும்பையில் வேலை செய்யும் தமிழ் பெண்ணாக இவர் நடித்து அசத்தியுள்ளார்.இதனிடையே படத்தின் ப்ரோமோஷன் காக இவர் பல பேட்டிகளை அழைத்து வந்த நிலையில் தனியார் youtube சேனலுக்கு அளித்த பேட்டியில் கற்பனை கதை ஏதாவது கூறும்படி அவரிடம் தொகுப்பாளர் கேட்டுள்ளார்.

அதற்கு சிம்பு உடலான காதல் பற்றி சுவாரசியமான கதை ஒன்றைக் கூறி பலரையும் ஆச்சரியத்தில் வாழ்த்தி உள்ளார் சித்தி இத்துனானி. அதாவது எனது கற்பனை கதையில் சிம்புவும் நானும் பள்ளிப்பருவ காதலர்கள். அதில் என்னுடைய தந்தையாக ரஜினி சார் இருக்க வேண்டும். சிம்புவின் அண்ணனாக உதயநிதி ஸ்டாலின் இருக்க வேண்டும். இறுதியாக ரஜினி மற்றும் உதயநிதி ஸ்டாலின் இருவரும் இணை ந்து சிம்புவுக்கும் எனக்கும் கல்யாணம் பண்ணி வைத்தால் நன்றாக இருக்கும் என்று கலகலப்பாக அவர் பேசியுள்ள நிலையில் இந்த பேட்டி தற்போது வைரல் ஆகி வருகிறது.
