நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் கடந்த ஜூன் மாதம் மகாபலிபுரத்தில் உள்ள ரிசார்ட் ஒன்றில் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்த கையோடு தாய்லாந்திற்கு ஹனிமூன் சென்றனர்.அங்கு இருவரும் ஒன்றாக இணைந்து எடுத்துக்கொண்ட பல்வேறு புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார்.

தற்போது இரண்டாவது ஹனிமூனுக்கு ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுள்ளனர். நேற்று முன் தினம் நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஸ்பெயின் நாட்டில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் கையில் தேசிய கொடியை பிடித்தபடி கொண்டாடினர். அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.

இதனைத் தொடர்ந்து நயன்தாரா நெற்றியில் ரொமான்டிக் மூடில் காதல் பொங்க விக்னேஷ் சிவன் முத்தம் கொடுத்த புகைப்படமும் வெளியானது. இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு இருவரும் பல நாடுகளுக்கு காதல் பறவைகளாக பறந்து கொண்டிருக்கும் நிலையில் நயன்தாரா வெள்ளை நிற குட்டை கவுனில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த உடையில் விதவிதமான போஸ் கொடுத்து துளியும் மேக்கப் இல்லாமல் நயன்தாரா புகைப்படம் எடுத்துள்ளார். அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியான நிலையில் ரசிகர்கள் பலரும் அதனை அதிக அளவு ஷேர் செய்து வருகிறார்கள்.
