தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரங்களாக இருந்த பலரும் தற்போது முன்னணி நடிகைகளாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர். அதில் ஒரு சிலர் குழந்தை நட்சத்திரங்களாக நடித்து தற்போது ஆளை அடையாளம் தெரியாத அளவிற்கு காணாமல் போய் உள்ளனர்.ஆனால் சிலரோ இளம் வயதிலேயே டாப் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் அளவிற்கு நடிப்பிலும் சரி கவர்ச்சியிலும் சரி முன்னணியாக திகழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

அந்த வரிசையில் இருப்பவர் தான் கேப்ரில்லா, இவர் சில படங்களிலும் சீரியல்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த நிலையில் தற்போது முன்னணி நடிகையாக வளர்ந்து நிற்கிறார். தனுஷ் நடிப்பில் வெளியான 3 திரைப்படத்தில் ஸ்ருதிஹாசன் தங்கையாக நடித்து அசத்தியிருந்தார். இவர் தற்போது விஜய் டிவியில் ஈரமான ரோஜாவே சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
அதுமட்டுமல்லாமல் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலமே ரசிகர் மத்தியில் மேலும் பிரபலமானது குறிப்பிடத்தக்கது. இவருக்கு இன்ஸ்டாவில் 18 லட்சம் பாலோயர்ஸ் உள்ளனர்.இந்நிலையில் ஈரமான ரோஜாவே சீரியலில் ஒரு சூட்டில் கேப்ரில்லாவுக்கு அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காட்டப்பட்டது. இதனிடையே மருத்துவமனையில் அவர் செய்த சேட்டைகள் குறித்த வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.