“மேடம் நீங்க கிரேட்”….. லஷ்மி ராமகிருஷ்ணன் மகளுக்கு இப்படி ஒரு பிரச்சனையா?….. மனதை கலங்க வைக்கும் பதிவு….!!!!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சி மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானவர் லட்சுமி ராமகிருஷ்ணன். இந்த நிகழ்ச்சிகள் ஒரு பக்கம் வரவேற்பை பெற்றாலும் மறுபக்கம் சில விமர்சனங்களையும் சந்தித்தது.

அது மட்டுமல்லாமல் லஷ்மி ராமகிருஷ்ணன் பல்வேறு திரைப்படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியுள்ளார். இவர் இயக்கிய ஹவுஸ் ஓனர் திரைப்படம் முக்கிய விவாதங்களை எழுப்பியது. அதாவது இவர் மேல் தட்டு வருக அரசியலை தூக்கி பிடிக்கிறார் என்று பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.

இவர் தற்போது தான் இயக்கம் புது படத்திற்காக இளையராஜா உடன் கூட்டணி வைத்துள்ளார். படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை. இப்படத்தில் சமுத்திரகனி, அபிராமி,ரோபோ சங்கர் மற்றும் மிஷ்கின் உள்ளிட்ட பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்நிலையில் லஷ்மி ராமகிருஷ்ணன் ஓணம் பண்டிகையை முன்னிட்டு தனது மகளைக் குறித்து அவர் போட்டுள்ள பதிவு பலரையும் கலங்க வைத்துள்ளது.

அதாவது அவரின் மகளுக்கு உடல்நிலை சரியில்லாமல் ஆறு மாதங்களாக இருப்பதாகவும், 20 மருத்துவர்கள் தங்களால் இயன்றதை செய்தும் அவரின் மகள் சேயா குணமடையவில்லை என மிகுந்த வருத்தத்துடன் அவர் போட்டு உள்ள பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.