பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இருந்து விலகும் முக்கிய பிரபலம்…. ரசிகர்கள் ஷாக்….!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சீரியல்களில் டாப் லிஸ்டில் இருக்கும் சீரியல்தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று வளம் வந்து கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாச கதை காண்போரை நெகிழ வைத்துள்ளது. இந்த சீரியலுக்கு என்று தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

இதில் தற்போது பல திருப்பங்கள் நடந்து சீரியல் விறுவிறுப்பாக ஓடி கொண்டு இருக்கிறது. இந்த சீரியலில் பலர் நடித்து வந்தாலும் கதிர் மற்றும் முல்லை ஜோடி தான் இந்த நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்று தந்தது என்று கூறலாம். அதில் கதிர் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் குமரன்.முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த சித்ரா திடீரென உயிரிழந்த நிலையில் அவருக்கு பதிலாக பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து வந்த நடிகை காவியா முல்லை கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்யப்பட்டார்.

முதலில் இவர் முல்லை கதாபாத்திரத்திற்கு சற்று செட் ஆகாமல் இருந்தாலும் நாளடைவில் இவர் முல்லை கதாபாத்திரத்தில் முழுமையாக செட்டாகி விட்டார்.தற்போது கதிர்முள்ள இருவரும் அண்ணன் வீட்டிலிருந்து வெளியேறி ஹோட்டல் ஆரம்பித்து முன்னேறுவது போல கதை நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்தவரும் காவியா இந்த சீரியலில் இருந்து விலகப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

அவர் சமீபத்தில் பட்டப்படிப்பு முடித்த புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்த நிலையில் அவர் சீரியலில் இருந்து தற்போது விளக்கப் போவதாக இணையத்தில் வெளியாகி உள்ள தகவல் பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.