விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சீரியல்களில் டாப் லிஸ்டில் இருக்கும் சீரியல்தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று வளம் வந்து கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாச கதை காண்போரை நெகிழ வைத்துள்ளது. இந்த சீரியலுக்கு என்று தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

இதில் தற்போது பல திருப்பங்கள் நடந்து சீரியல் விறுவிறுப்பாக ஓடி கொண்டு இருக்கிறது. இந்த சீரியலில் பலர் நடித்து வந்தாலும் கதிர் மற்றும் முல்லை ஜோடி தான் இந்த நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்று தந்தது என்று கூறலாம். தற்போது கதிர்முள்ள இருவரும் வீட்டை விட்டு வெளியேறி சுயமாக தொழில் செய்து வருகின்றன. மற்றொரு பக்கம் வீட்டை மீனாவின் அப்பாவிற்கு விற்று விட தற்போது அவர் தனது நிஜமுகத்தை காட்டத் தொடங்கியுள்ளார்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
இந்நிலையில் முல்லையாக நடித்து வந்த காவியா அறிவுமணி இந்த தொடரில் இருந்து தற்போது விலகுவதாக தெரிவித்துள்ளார். இதனைப் பார்த்து ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவர் கடைசி நாள் ஷூட்டிங்கில் முல்லையாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் .
