மேளத்தாளம் முழங்க குத்தாட்டம் போட்ட மௌன ராகம் சீரியல் நடிகை…. இணையத்தை கலக்கும் வேற லெவல் வீடியோ….!!!!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரங்களாக இருந்த பலரும் தற்போது முன்னணி நடிகைகளாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர். அதில் ஒரு சிலர் குழந்தை நட்சத்திரங்களாக நடித்து தற்போது ஆளை அடையாளம் தெரியாத அளவிற்கு காணாமல் போய் உள்ளனர்.ஆனால் சிலரோ இளம் வயதிலேயே டாப் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் அளவிற்கு நடிப்பிலும் சரி கவர்ச்சியிலும் சரி முன்னணியாக திகழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

அந்த வரிசையில் இருப்பவர் தான் பிரவீனா தாஹா, இவர் குழந்தை நட்சத்திரமாக ஜில்லா, புலி மற்றும் பூஜை உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து அசத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் நிறைய சீரியல்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த ரவீனா தற்போது தனது 18 வயதில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மௌனராகம் என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளார்.

இவர் அவ்வப்போது வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மூலமாக இவருக்கு 14 லட்சம் இன்ஸ்ட்டா பாலோயர்ஸ் உள்ளனர். இதனிடையே அவர் அவ்வப்போது பல நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தாளராக பங்கேற்று வரும் நிலையில் தற்போது ஒரு நிகழ்ச்சியில் மேளதாளம் முழங்க அதற்கு குத்தாட்டம் ஆடும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.