தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தென்னிந்திய சினிமாவில் டாப் இசை அமைப்பாளராக வளம் வருபவர் அனிருத். நடிகர் தனுஷ் நடித்த 3 திரைப்படத்தின் அறிமுகமான அனிருத் முதல் படத்திலேயே உலக அளவில் பிரபலமானார். அனிருத் இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் ஒரு சிறந்த பாடகராகவும் தமிழ் சினிமாவில் வலம் வருகின்றார்.

அவர் இசையமைக்கும் பாடல்கள் மட்டுமல்லாமல் மற்ற இசையமைப்பாளர்கள் இசையிலும் அனிருத் பல பாடல்களை பாடி இருக்கிறார். அவர் பாடிய அனைத்து பாடல்களுமே ஹிட் கொடுத்துள்ளனர்.இந்நிலையில் அனிருத் வீட்டில் முக்கிய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அதாவது அவரின் தாத்தாவும்,இயக்குனர் மற்றும் இசையமைப்பாளரான எஸ் வி ரமணன் வயது மூப்பு காரணமாக சென்னையில் இன்று காலை காலமானார்.

தொலைக்காட்சி மற்றும் வானொலி என அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கிய எஸ்வி ரமணன், மக்கள் தொடர்பு கலையில் மான்பாளர் என்று அழைக்கப்படுவார். இவர் ஆயிரக்கணக்கான வானொலி விளம்பரங்களுக்கு குரல் கொடுத்துள்ளார்.சென்னையில் வசித்து வந்த இவர் இன்று காலை வயது மூப்பு காரணமாக காலமானார்.இவரின் மறைவுக்கு திரையுலகினர் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
