தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் ஏழு வருடங்களுக்கு முன்பே காக்கா முட்டை திரைப்படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். அதனைத் தொடர்ந்து அவர் நடித்த கனா திரைப்படம் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.தொகுப்பாளராக மீடியாவிற்குள் நுழைந்த ஐஸ்வர்யா ராஜேஷ் பல அவமானங்கள் மற்றும் கடின உழைப்பை கடந்து இன்று முன்னணி நடிகையாக வளம் வருகிறார். இவரின் நடிப்பில் வெளியான பெரும்பாலான படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

தற்போது டிரைவர் ஜமுனா, மோகன்தாஸ், தி கிரேட் இந்தியன் கிச்சன் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே ஐஸ்வர்யா ராஜேஷ் மீது தயாரிப்பாளர்கள் கடும் கோபத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது இந்த படங்கள் வெளியாகாமல் இருக்கும் நிலையில் ஒரு படத்திற்காக 1.5 கோடி அளவில் ஐஸ்வர்யா ராஜேஷ் சம்பளத்தை உயர்த்தி கேட்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் தனது நெருங்கிய தோழியான பிக் பாஸ் நடிகை சம்யுக்தா மற்றும் நடிகர் கதிருடன் இணைந்து இரவு பார்ட்டியில் ஐஸ்வர்யா ராஜேஷ் கலந்து கொண்டார்.அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
