“என் இனிய இயக்குனர் பாரதிராஜா அவர்களே”…. பிரான்சில் ராதிகா செய்த நெகிழ்ச்சி செயல்…. வைரலாகும் வீடியோ….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் தான் பாரதிராஜா. இவர் இயக்கத்தில் வெளியான மண்வாசனை கலந்த பல்வேறு திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஹிட் கொடுத்துள்ளன.  இந்நிலையில் பாரதிராஜாவுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக அண்மையில் தகவல் வெளியானது.கடந்த வாரம் மதுரை விமான நிலையத்தில் திடீரென அவர் மயக்கம் போட்டு விழுந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பிறகு ஒருநாள் மதுரையிலேயே தங்கி விட்டு அடுத்த நாள் சென்னை திரும்பினார்.

இந்நிலையில் அவருக்கு திடீரென அஜீரண கோளாறு ஏற்பட்டதை தொடர்ந்து சென்னையில் உள்ள மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை மற்றும் பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன. அவர் உடல்நிலை சீராக இருப்பதாகவும் நான்கு நாட்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்புவார் என கூறப்பட்ட நிலையில் திடீரென அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் திரைத்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனைத் தொடர்ந்து கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட பலரும் மருத்துவமனைக்கு நேரில் சென்று பாரதிராஜாவை சந்தித்து ஆறுதல் கூறினர். இந்நிலையில் நடிகை ராதிகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பாரதிராஜாவுக்காக சிறப்பு பிரார்த்தனை செய்துள்ளார். பிரான்சில் இருக்கும் அவர் அங்கிருந்து லூர்து சர்ச்சில் மெழுகுவர்த்தி ஏந்தி இந்த பிரார்த்தனையை மேற்கொண்டுள்ளார்.

மேலும் என் இனிய இயக்குனர் பாரதிராஜா அவர்களே நீங்கள் விரைவில் குணமடைய எனது சிறப்பு பிரார்த்தனை, நீங்கள் விரைவில் குணமடைய வேண்டும், ஆரோக்கியமாக இருங்கள் உங்களிடம் பேசுவதை மிஸ் செய்கிறேன் என தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து ராதிகா மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை செய்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.