விக்ரமின் கோப்ரா படத்தில் பிரபல நகைச்சுவை நடிகர்…. ட்ரெய்லரை பார்த்து குஷியான ரசிகர்கள்…. அவர் யார் தெரியுமா….????

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் விக்ரம். இவரின் நடிப்பில் அண்மையில் உருவாகியுள்ள திரைப்படம் தான் கோப்ரா. இந்த திரைப்படத்தை இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ளார். படத்தின் டிரைலர் கடந்த ஆகஸ்ட் 25ம் தேதி வெளியானது.

இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக ஸ்ரீநிதி செட்டி நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து கே எஸ் ரவிக்குமார், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹீர்பான் பதான், மியா சார்ஜ், ஜான் விஜய் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ள இந்த படத்தை லலித் குமார் தயாரித்துள்ளார்.

படத்தின் டிரைலர் அண்மையில் வெளியான நிலையில் 7 வித்தியாசமான கெட்டப் களில் விக்ரம் இப்படத்தில் நடித்து அசத்தியுள்ளார். இந்த ட்ரெய்லர் பிரபல டிவி நகைச்சுவை நடிகர் மற்றும் என்டர்டைனர் மதுரை முத்து இடம்பெற்றுள்ளார். தமிழ் சினிமாவின் மிக முக்கிய ரியாலிட்டி நகைச்சுவையாளராக அறியப்படுபவர் தான் மதுரை முத்து. இவரின் நகைச்சுவைக்கு கோடிக்கணக்கானோர் அடிமை.

உலகம் எங்கும் தமிழில் சிறப்பு நகைச்சுவை பட்டிமன்றங்களை நடத்தி புகழ் பெற்றவர். இப்படிப்பட்ட புகழ்மிக்க இவர் கோப்ரா ட்ரெய்லரில் இடம் பெற்றுள்ளது,படத்தில் நடித்திருப்பதும் அவருடைய ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.வருகின்ற ஆகஸ்ட் 31ஆம் தேதி கோப்ரா திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் ட்ரெய்லரில் மதுரை முத்து இடம் பெற்றிருப்பது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.