Whatsapp பயனர்களே உஷார்…. இதை யாரும் நம்பாதீங்க…. எச்சரிக்கும் whatsapp CEO….!!!!

உலகம் முழுவதும் கோடி கணக்கான பயனர்களைக் கொண்டுள்ள whatsapp நிறுவனம் அவ்வப்போது தனது பயனாளர்களை கவரும் வகையில் பல்வேறு அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது. அது பயனாளர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சமீபத்தில் அடுத்தடுத்து அப்டேட்டுகள் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் உடனடி செய்தி பகிரும் தளமான whatsapp ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக வாட்ஸப் தலைமை நிர்வாக அலுவலர் வில் கேத்கார்ட் செயலியின் போலி பதிப்பு குறித்து விட்டதில் பதிவிட்டுள்ளார். அதாவது செயலியின் மாற்றி அமைக்கப்பட்ட பதிப்பை பயன்படுத்தும் பயனர்கள் பெரும் இழப்பை சந்திக்க நேரிடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

குற்றவாளிகள் சிலர் whatsapp பெயரை பயன்படுத்தி பயனர்களை ஏமாற்றி வருகிறார்கள். சைபர் குற்றவாளிகள் வெவ்வேறு வழிகளில் பயனர்களை குறி வைத்து வருகின்றனர். வாட்ஸ் அப்பை போலவே சேவைகளை வழங்கும் பல போலி ஆப்கள் இருப்பதை வாட்ஸ் அப் நிறுவனம் கண்டறிந்துள்ளது. இந்த போலி செயலிகளில் மால்வேர் கண்டறியப்பட்டுள்ளது. இந்த பயன்பாடுகள் கூகுள் பிளே ஸ்டோருக்கு பதிலாக பிற இணையதளங்களில் இருந்து டவுன்லோட் செய்யப்படுகிறது.

அதில் Heymods, Hey WhatsApp போன்ற சில செயல்களில் போலி வாட்ஸ் அப் பதிப்புகள் அடங்கும். இந்த பயன்பாடுகள் கூடுதல் மற்றும் புதிய அம்சங்களை வழங்குவதாக விளம்பரம் செய்து பயனர்களை ஈர்க்கிறது. ஆனால் இது பயனர்களின் ஃபோன்களில் உள்ள தகவல்களைத் திருட பயன்படுத்தப்படுகிறது. எனவே இது போன்ற செய்திகளை நம்பி பயனர்கள் ஏமாற வேண்டாம் என whatsapp சிஇஓ எச்சரிக்கை விடுத்துள்ளார்.