தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சூர்யா.இவரின் நடிப்பில் அண்மையில் வெளியான பல திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளன. அவ்வகையில் நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு சூரரைப் போற்று திரைப்படம் வெளியானது.பல்வேறு எதிர்பார்ப்பிற்கு இடையே ஓடிடி தளத்தில் வெளியான இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படம் விமர்சன ரீதியாகவும் மக்கள் மத்தியில் பாராட்டுகளை அள்ளியது. இப்படத்தில் நடிகர் சூர்யா தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இதனிடையே அண்மையில் 68 ஆவது தேசிய விருது குறித்த பட்டியல் வெளியிடப்பட்டது.அதில் சூரரைப் போற்று சிறந்த நடிகர், நடிகை, திரைப்படம், திரைக்கதை மற்றும் பின்னணி இசை என ஐந்து விருதுகளை பெற்றுள்ளது.

இந்நிலையில் 68 வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நேற்று முன்தினம் மாலை டெல்லியில் நடைபெற்றது. அதில் விருது வாங்குவதற்காக மும்பைக்கு சூர்யா மற்றும் ஜோதிகா இருவருமே சென்றுள்ளனர். சூர்யா வேஷ்டி சட்டையில் ட்ரடிஷனலாக இந்த விழாவிற்கு வருகை தந்தார்.

அப்போது சூர்யா மேடைக்கு ஏரி குடியரசு தலைவர் கையில் தேசிய விருது வாங்குவதை ஜோதிகா கீழே இருந்து மிகுந்த மகிழ்ச்சியுடன் அதனை தனது ஃபோனில் போட்டோ எடுத்தார்.அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.இந்நிலையில் சூர்யா ஜோதிகாவிற்கு ஆரத்தி எடுத்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.