நவரச நாயகனின் மனைவி, 3 மகன்கள் இவங்க தான்…. இதுவரை பலரும் பார்த்தீடாத…. அழகிய குடும்ப புகைப்படம் இதோ….!!!

தமிழ் சினிமாவில் நவரச நாயகன் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நடிகர் கார்த்திக்கு. இவர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான அலைகள் ஓய்வதில்லை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்த முதல் படமே வெற்றி கொடுத்ததால் இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன.

இந்த படத்தை தொடர்ந்து மௌன ராகம், ஆகாய கங்கை, லக்கி மேன், உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் போன்ற பல்வேறு படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். பின்னர் பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் சினிமாவிலிருந்து சற்று விலகி இருந்த இவருக்கு,கடந்த 2015 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான அனேகன் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்தத் திரைப்படத்தில் வில்லனாக மாஸ் என்ட்ரி கொடுத்தார்.

தற்போது இவரின் மூத்த மகன் கௌதம் கார்த்திக் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். விரைவில் அவருக்கு நடிகை மஞ்சுமா உடன் திருமணம் நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே நடிகர் கார்த்திக் 1998 ஆம் ஆண்டு ராகினி என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து பல படங்களில் நடித்துள்ளனர்.

அதன் பிறகு நான்கு வருடங்கள் கழித்து ராகினியின் தங்கை ரதியை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் கார்த்திக். இதனிடையே நடிகர் கார்த்திக்கின் மனைவி ராகினி மற்றும் மூன்று மகன்கள் உடன் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.