90 லட்ச ரூபாய் காரை சல்லி சல்லியா நொறுக்கிட்டீங்களேடா….. ரசிகர்களின் செயலால் கடுப்பான கூல் சுரேஷ்…. வைரல் வீடியோ….!!!

தமிழ் திரைப்பட நடிகரான கூல் சுரேஷ் கடந்த சில வருடங்களாகவே முன்னணி நடிகர்களின் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்களை முதல் நாளே பார்த்து படம் குறித்து விமர்சனம் செய்து வருகிறார். அதனாலயே இவர் தற்போது ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி விட்டார். அது மட்டுமல்லாமல் இவர் ஒரு தீவிர சிம்பு ரசிகரும் கூட. எந்த ஒரு திரைப்படம் வெளியானாலும் அந்த படத்தை குறித்து நெட்டிசங்களிடம் முதல் நபராக கருத்து தெரிவிப்பவர் இவர் தான்.

சிம்புவின் நடிப்பில் உருவாகியுள்ள வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படம் வெளியாவதற்கு முன்பு இரண்டு மாதங்களாக இப்ப படத்தின் ப்ரோமோஷன் வேலைகளை கூல் சுரேஷ் தீவிரமாக செய்து வந்தார். எந்த ஒரு படம் வந்தாலும் அல்லது எந்த நிகழ்ச்சிக்கு அவர் சென்றாலும் அதில் முதலில் வெந்து தணிந்தது காடு படத்தை வைத்து அளவு பஞ்ச் வசனம் பேசியுள்ளார்.

அன்னையின் நடிகர் கார்த்தி நடித்த விருமன் திரைப்படம் வெளியான போது அதனை பார்க்க வந்த கூல் சுரேஷ், “எந்த தணிந்தது காடு திருமணத்து வணக்கத்தை போடு” என்று பஞ்ச் வசனம் பேசினார். இந்நிலையில் சென்னையில் நேற்று வெந்து தணிந்தது காடு திரைப்படம் வெளியானது. அந்தத் திரைப்படத்தை பார்ப்பதற்காக கூல் சுரேஷ் காரில் வந்து இறங்கினார். அப்போது அவரைப் பார்த்த சிம்பு ரசிகர்கள் ஆர்வத்தில் அவர் மீது தண்ணீர் ஊற்றி வரவேற்றனர்.

அது மட்டுமல்லாமல் ரசிகர்கள் அவரின் காரில் ஏறி செல்பி எடுத்துக் கொண்டனர். அப்போது அவரின் கார் கண்ணாடி உடைந்து போனது.அது மட்டுமல்லாமல் அவரை சூழ்ந்து ரசிகர்கள் இழுத்த போது அவர் அணிந்திருந்த சட்டையும் கிழிந்து போனது.இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து கூல் சுரேஷ் பேசியுள்ள வீடியோ ஒன்றை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.