வாடகைத்தாய் சர்ச்சையில் சிக்கிய நயன் – விக்கி…. வேதனையில் உண்மையை உடைத்த பெரிய மாமனார்…. ஷாக்கான ரசிகர்கள்….!!!!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகையான நயன்தாரா கடந்த ஜூன் மாதம் தனது நீண்ட நாள் காதலரான இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். மகாபலிபுரத்தில் இவர்களின் திருமணம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இவர்களின் திருமணத்தில் திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். திருமணம் முடிந்த கையோடு ஹனிமூன் சென்ற நயன் மற்றும் விக்கி தம்பதியினர் தங்கள் புகைப்படங்களை அவ்வப்போது இணையத்தில் பகிர்ந்தனர்.

இந்நிலையில் அண்மையில் தங்களுக்கு இரட்டைக் குழந்தை பிறந்துள்ளதாக விக்னேஷ் சிவன் அறிவித்து இருந்தார்.திருமணம் முடிந்த நான்கே மாதத்தில் இப்படி கூறுகிறார்கள் என முதலில் அதிர்ச்சி அடைந்த பின்பு ரசிகர்கள் பின்னர் தெளிவாகினர்.அதாவது கடந்த நவம்பர் மாதமே இருவரும் வாடகத்தை மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள முடிவு செய்து அதற்கான வேலைகளை செய்துள்ளதாக தகவல் வெளியானது. இது தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இந்நிலையில் விக்னேஷ் சிவனின் பெரியப்பா பேட்டி அளித்துள்ள சில கருத்துக்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதாவது, என்னை திருமணத்திற்கு அளிக்கவில்லை என்பதால் கோபமில்லை. ஆனால் அவர்கள் திருமணத்திற்கு பின் அநாகரிகமாக நடந்து கொள்கின்றனர். தங்களின் தனிப்பட்ட வாழ்க்கையை இணையத்தில் பகிர்வது எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

கணவன் மனைவி இடையே இருக்கும் அந்தரங்கத்தை இவ்வாறு பகிர்வது தவறு. தாய்மை என்பது மிகப்பெரிய விஷயம். ஆனால் திருமணம் ஆகி நான்கு மாதத்தில் குழந்தை பிறந்தது என கூறுகின்றனர். இதையெல்லாம் கேட்டு என்னால் வெளியே தலை காட்டவே முடியவில்லை. பலரும் ஏதேதோ கேட்கிறார்கள்.

கணவன் மனைவி என்றால் எப்படி இருக்க வேண்டும் சட்டப்படி எப்படி வாழ வேண்டும் என்ற பல வரையறைகள் உள்ளது. பணம் உள்ளது என்பதற்காக எதையும் செய்யக்கூடாது என அவர் வெறுத்தத்துடன் தெரிவித்துள்ள நிலையில் அவர் கூறியுள்ள இந்த கருத்து தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.