தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் கடந்து ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர். அவர்களின் திருமணத்தில் திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். பின்னர் திருமணம் முடிந்த கையோடு ஹனிமூன் சென்று இருந்த விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தம்பதி அவ்வப்போது தங்களது புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வந்தனர்.

இதனிடையே அண்மையில் தங்களுக்கு இரட்டைக் குழந்தை பிறந்து இருப்பதாக புகைப்படத்துடன் விக்னேஷ் சிவன் அறிவித்து இருந்தார். அதனைக் கண்டு பலரும் அதிர்ச்சி அடைந்த நிலையில்,திருமணம் முடிந்த நான்கே மாதத்தில் எப்படி குழந்தை பிறந்திருக்க முடியும் என பல கேள்விகளும் எழுந்தது. இருவரும் வாடகைத்தாய் மூலம் குழந்தைகள் பெற்றுக் கொண்டதாக தெரிவித்திருந்தனர்.

இது பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் தமிழக அரசு இவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்படும் என அறிவித்திருந்தது. இதற்காக விசாரணை குழுவும் நியமிக்கப்பட்டது.இவை அனைத்தும் முடிவுக்கு வரும் நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இந்நிலையில் நேற்று தீபாவளி வாழ்த்து தெரிவித்து தனது இரண்டு குழந்தைகளுடன் இணைந்து நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
முதல் முறையாக தனது ரசிகர்களுக்கு நயன்தாரா தனது குழந்தைகளை காட்டியுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.