தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் தனுஷ். இவர் நடிகராக மட்டுமல்லாமல் பாடகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர் மற்றும் இயக்குனர் என பன்முகம் கொண்ட கலைஞராக திகழ்ந்து கொண்டிருக்கிறார். தமிழ் சினிமா மட்டுமல்லாமல் ஹாலிவுட் மற்றும் பாலிவுட் என அனைத்திலும் அசத்தி வருகிறார்.

இவர் சமீபத்தில் நடித்த ஹாலிவுட் படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. தமிழில் இவர் சமீபத்தில் நடித்த படங்கள் தொடர்ந்து தோல்வியை தழுவியதால் கட்டாயம் வெற்றியை அடைய வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்ட தனுஷ் தற்போது மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் அனிருத் இசையில் திருச்சிற்றம்பலம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

அந்தத் திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் சாதனை படைத்துள்ளது. இப்படத்தை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வாத்தி திரைப்படம் உருவாகி வருகிறது. வெங்கி இயக்கி வரும் இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக உள்ளது.

சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில் தனுசுக்கு ஜோடியாக மலையாள நடிகை சம்யுக்தா மேனன் நடித்து வருகிறார். அது மட்டுமல்லாமல் முக்கிய கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி நடிக்கின்றார்.

இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியலான ராஜா ராணி 2 சீரியலில் கதாநாயகனின் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருகின்ற நடிகை பிரவீனா தனுசு உடன் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படப்பிடிப்பில் தனுஷ் மற்றும் பிரவீனா இருவரும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் போன்ற தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் வாத்தி படத்தில் பிரவீனா நடித்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
