உலகிலேயே NO.1….. சினிமா பக்கமே வராத அர்ஜுனின் இளைய மகள்…. இப்போ என்ன தொழில் செய்றாங்க தெரியுமா?…..!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து ஆக்சன் காட்சிகள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகர் அர்ஜூன். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவரின் மகள் ஐஸ்வர்யா தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோயினியாக வளம் வந்து கொண்டிருக்கிறார்.கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான பட்டத்து யானை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.தற்போது தெலுங்கு திரையுலகில் நுழைந்துள்ளார்.

இதனிடையே அர்ஜூன் விஜயின் தளபதி 67 படத்தில் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனாவை சினிமா பக்கம் யாரும் பார்த்திருக்க வாய்ப்பே இல்லை. ஏனென்றால் அவருக்கு சினிமா என்பதில் அதிக அளவு ஆர்வம் இல்லை. இவர் தற்போது தொழிலதிபராக அவதாரம் எடுத்துள்ளார்.

அதாவது அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா தற்போது ஹேண்ட் பேக்குகளை தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். அந்த பேக்குகள் அனைத்தும் பழ தோள்களை கொண்டு உருவாக்கி அதனை விற்பனை செய்து வருகிறார்.மேலும் உலகிலேயே இப்படிப்பட்ட முறையில் தயாரித்தே விற்பனை செய்யும் முதல் நிறுவனமாக அஞ்சனாவின் சார்ஜா நிறுவனம் விளங்கி வருகிறது. இதனை அடுத்து அவருக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றன.