இதுவரை யாரும் இப்படி பர்த்டே கொண்டாடிருக்க மாட்டாங்க…. வினோதமாக வனிதா செய்த செயல்…. வைரல் புகைப்படம்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் வனிதா விஜயகுமார். இவர் சந்திரலேகா படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். அதனைத் தொடர்ந்து சில பழங்களில் நடித்து வந்த இவர் திருமணத்திற்கு பிறகு நடிப்பை ஓரம் கட்டினார். அதன் பிறகு சில வருடங்கள் கழித்து திருமண வாழ்க்கையில் சில பிரச்சனைகள் ஏற்பட்ட காரணத்தினால் இரண்டு முறை விவாகரத்து செய்தார். அது மட்டுமல்லாமல் விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் மகளான இவர் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தனது இரண்டு மகள்களுடன் இன்றும் தனியாக வசித்து வருகிறார்.

சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை எந்த ஒரு கதாபாத்திரத்திலும் தயங்காமல் நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதன் பிறகு தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். தற்போது அனல் காற்று, அந்தக் கண் மற்றும் சிவப்பு மனிதன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடிகை வனிதா கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க மறுப்பக்கம் மேக்கப் செய்வதிலும் வனிதா ஆர்வம் காட்டி வருகிறார்.

மேலும் இவர் அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்யும் அங்காடி ஒன்றையும் நடத்தி வருகின்றார். தற்போது இவர் தனியாக boutique ஒன்றை திறந்து உள்ளார். இது ஒரு பக்கம் இருக்க மறு பக்கம் தனது மகள்களுடன் இணைந்து youtube மூலம் உணவு தயாரிப்பு பற்றிய வீடியோக்களை வனிதா வெளியிட்டு வருகிறார். இதனிடையே அக்டோபர் ஐந்தாம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாடுவதற்காக பாங்காங் சென்று இருந்தால் வனிதா அங்கு தனது பிறந்த நாளை யாரும் கொண்டாடாத வகையில் வினோதமாக கொண்டாடியுள்ளார்.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Vanitha Vijaykumar இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@vanithavijaykumar)

அதாவது அனைவரும் பிறந்தநாளுக்கு கேக் வெட்டி கொண்டாடுவோம். ஆனால் வனிதா நண்டு சமைத்து கொண்டாடியுள்ளார். கேக் போலவே அதை தன் கையில் வைத்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ள வனிதா ஹாப்பி பர்த்டே டு மீ என தனக்குத்தானே பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அது மட்டுமல்லாமல் விரைவில் அந்த வீடியோ வெளியிடப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ள நிலையில் இப்படி ஒரு பிறந்த நாளை யாரும் இதுவரை கொண்டாடி இருக்க முடியாது என்பது போல வனிதா ஸ்டேட்மெண்ட் இருப்பதாகவும் வீடியோ எப்போது வெளியாகும் என ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கின்றனர்.