இந்திய அளவில் NO:1….. பாலிவுட் நடிகர்களை பின்னுக்கு தள்ளிய விஜய், சமந்தா…. ஆர்மேக்ஸ் வெளியிட்ட பட்டியல் இதோ.!!!!

இந்திய அளவில் மிக பிரபலமான சினிமா நட்சத்திரங்களின் பட்டியலை ஆர் மேக்ஸ் ஸ்டார்ஸ் இந்தியா என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் அனைத்து நடிகர்களையும் பின்னுக்கு தள்ளி தளபதி விஜய் முதலிடம் பிடித்துள்ளார். அவரைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் பிரபாஸ், அதற்கு அடுத்ததாக யாஷ், அல்லு அர்ஜுன் மற்றும் ஜூனியர் என்டிஆர் போன்ற பிரபலங்கள் இடம் பிடித்துள்ளன.

அதனைப் போலவே சிறந்த பெண் நட்சத்திரங்களுக்கான பட்டியலில் முதல் இடத்தை நடிகர் சமந்தா பெற்றுள்ளார். இரண்டாவது இடத்தில் ஆலியா பட், மூன்றாவது இடத்தில் நயன்தாரா, நான்காவதாக காஜல் அகர்வால், ஐந்தாவது இடத்தில் தீபிகா படுகோனே, ஆறாவது இடத்தில் ராஷ்மிகா மந்தனா, 7வது இடத்தில் அனுஷ்கா, எட்டாவது இடத்தில் கத்ரீனா கைஃப், 9வது இடத்தில் கீர்த்தி சுரேஷ் மற்றும் பத்தாவது இடத்தில் பூஜா கிட்டே ஆகியோர் உள்ளனர். இதன் மூலம் பாலிவுட் நடிகைகளை ஓரம் கட்டி முதல் இடத்தை பிடித்துள்ளார் சமந்தா.

பட்டியலில் முதலிடத்தை விஜய் மற்றும் சமந்தா பிடித்துள்ளதால் தமிழ் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். இதனைத் தொடர்ந்து அவர்களுக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றன.