அம்மாடியோ…. ஒரு போஸ்ட் போட இத்தனை கோடியா?…. இன்ஸ்டாவில் கோடி கோடியாய் சம்பாதிக்கும் நடிகை ஆலியா பட்….!!!!

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஆலியா பட். இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். அப்போதிலிருந்து இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். கமர்சியல் படங்கள் மற்றும் சவாலான கதாபாத்திரங்களை ஏற்று நடித்துவரும் இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது. இவர் ரன்பீர் கபூர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற இவர்களின் திருமணத்தில் முக்கிய பிரமுகர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். தற்போது ஆலியா பட், கல் இதயம் என்ற படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார். நடிப்பு ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம் சமூக வலைத்தளங்களில் இவர் எப்போதும் ஆக்டிவாக இருப்பார்.

பொதுவாக சினிமா நடிகர்கள் அனைவருக்கும் சமூக வலைத்தளங்களில் மில்லியன் கணக்கில் ரசிகர்கள் இருப்பார்கள். அந்த வரிசையில் 63.9 மில்லியன் ஃபாலோவர்ஸ் கொண்டிருக்கும் ஆலியா பட் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு போஸ்ட் போடுவதற்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் ஆக வாங்குகிறார். குறிப்பாக அவரது திரைப்படம் வெளியாகும் நேரத்தில் இரு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.