“அதுக்கு இவர்தான் காரணம்”…. 47 வயது ஆண் நண்பருடன் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்…. ட்விட்டரில் வெளியான PHOTO….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் என்று அனைவராலும் அறியப்படும் ரஜினிகாந்த். இவரின் பெரும்பாலான திரைப்படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் ஹிட் கொடுத்துள்ளனர். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளன. அவரின் மூத்த மகள் தான் ஐஸ்வர்யா.

இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான மூன்று திரைப்படத்தை இயக்கினார். அதன் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர் தனுஷை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ஆனால் சமீபத்தில் கருத்து வேறுபாடு காரணமாக தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா விவாகரத்து செய்வதாக அறிவித்தனர்.

தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் பாலிவுட் படத்தையும் ஐஸ்வர்யா இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. இந்நிலையில் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது ஆண் நண்பருடன் சேர்ந்து சைக்கிள் பயணம் செய்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அத்துடன், “இவர்தான் எனது அமைதியான நண்பர். 47 வயது பிறந்த நாளை கொண்டாடும் இவர் என்னுடன் 50 கிலோமீட்டர் சைக்கிளில் பயணித்துள்ளார். எனது பிட்னஸில் இவருக்கு முக்கிய பங்கு உண்டு.வயது அதிகரிக்க அதிகரிக்க எங்களது மீட்டரையும் அதிகரிப்போம் என்று ட்விட்டரில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பதிவிட்டுள்ளார்.