இயக்குனர் ஹரி இயக்கத்தில் இரண்டாவது முறையாக நடிகர் சூர்யா நடித்த கடந்த 2010 சிங்கம் திரைப்படம் வெளியாகிறது. அந்தப் படத்தில் நடிகை அனுஷ்கா முதன்முறையாக சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருப்பார். அவர்களுடன் விவேக், பிரகாஷ் ராஜ், மனோரமா, விஜயகுமார் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களும் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது.

இந்நிலையில் சிங்கம் திரைப்படத்தில் முதன்முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது நடிகர் சூர்யா கிடையாது என்று புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது சிங்கம் படத்தில் முதன் முதலில் ஹீரோவாக நடிப்பதாக இருந்தது தளபதி விஜய் தான். ஆனால் அப்போது சில தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த படத்தில் விஜய் ஆல் நடிக்க முடியாமல் போனது.அதன் பிறகு தான் இந்த படத்தில் சூர்யா கமிட் ஆனதாக புதிய தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.
