அட இவரா?…. இந்த வாரம் பிக்பாஸ் 6 வீட்டை விட்டு வெளியேறும் முக்கிய பிரபலம் யார் தெரியுமா?…. வெளியான தகவல்….!!!!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக் பாஸ். இதில் ஆறாவது சீசன் தற்போது சூடு பிடிக்க ஓடிக் கொண்டிருக்கிறது. கடந்த சீசன் உடன் ஒப்பிடுகையில் இந்த சீசன் முதல் நாளிலிருந்து மிகவும் விறுவிறுப்பு குறையாமல் பரபரப்பாக நடந்து வருகிறது. இந்த சீசனில் மக்களுக்கு முகம் தெரியாத பல புது முகங்கள் போட்டியாளராக களமிறங்கியுள்ளனர்.

அதிலும் ரசிகர்கள் எதிர்பார்ப்பவர்கள் தான் ஒவ்வொரு வாரமும் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறார்கள். ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த ஜிபி முத்து தானாக முன்வந்து வீட்டை விட்டு வெளியேறினார். பிறகு முதல் எலிமினேஷனில் சாந்தி வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.அவரைத் தொடர்ந்து அடுத்த வாரத்தில் வீட்டில் பெண்களிடம் தவறாக நடந்து கொண்டு ரசிகர்களை முகம் சுளிக்க வைத்த அசல் கோளாறு வெளியேறினார்.

அவர் வீட்டை விட்டு வெளியேறியவுடன் மக்களுக்கு தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சி மீது ஒரு நம்பிக்கை வந்துள்ளது. அதாவது மக்களின் கணக்குப்படி தான் நிகழ்ச்சி செல்கிறது என்ற எண்ணத்திற்கு மக்கள் வந்துள்ளனர். நிலையில் இந்த வார எலிமினேஷனுக்காக விக்ரம், அசீம், ஆயிஷா, செரினா மற்றும் கதிர் இடம் பெற்றுள்ள நிலையில் விக்ரமன் முதலிடத்தில் இருக்க ஷெரினா கடைசி இடத்தில் இருக்கிறார்.

இவருக்கு முந்தைய இடத்தில் ஆயிஷா இடம் பெற்றுள்ளார். எனவே ஷெரினா அல்லது ஆயிஷா இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேற வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது. இருந்தாலும் யார் வெளியேற போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.