விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சிக்கான தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. அதிலும் குறிப்பாக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல்ஹாசனுக்காக நிகழ்ச்சியை தொடர்ந்து பார்க்கும் பட்டாளம் ஒன்று தனியாக உள்ளது. இந்த நிகழ்ச்சியில் இதுவரை 5 சீசங்கள் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது ஆறாவது சீசன் தொடங்கியுள்ளது.

அதில் ஒன்பது ஆண் போட்டியாளர்கள்,10 பெண் போட்டியாளர்கள் மற்றும் ஒரு திருநங்கை என மொத்தம் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். மற்ற சீசன்களை விட இந்த சீசனில் முதல் நாளிலிருந்து வீட்டில் பல சண்டைகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த முறை கேப்டன் பதவி எதுவும் இல்லை என்பதால் போட்டியாளர்கள் அனைவரும் நான்கு அணிகளாக பிரிந்து வேலைகளை செய்து வருகிறார்கள்.

இதில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ள ஜி பி முத்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார். இந்நிலையில் பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் பிக் பாஸ் பின்னணியில் ஒலிக்கும் குரலுக்கு பெரிய ரசிகர்கள் உள்ளனர். அப்படி பிக்பாஸுக்கு ஆரம்பத்தில் இருந்து குரல் கொடுத்து வருபவர் தான் சாஷோ என்ற சதீஷ் சாரதி சச்சிதானந்தம்.

கடந்த ஐந்தாவது சீசனில் ஒரு மாதத்திற்கு 5 லட்சம் சம்பளமாக தரப்பட்ட நிலையில் இந்த சீசனில் ஒரு லட்சம் ரூபாய் உயர்த்தி அவருக்கு 6 லட்சம் ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது.அதாவது ஒரு நாளைக்கு 20 ஆயிரம் ரூபாய் தரப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.அதே சமயம் கமல்ஹாசனின் சம்பளமும் இந்த சீசனில் உயர்த்தி வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.