OMG: பிரபல பிக்பாஸ் நடிகை மாரடைப்பால் திடீர் மரணம்…. வீடியோ வெளியிட்ட வேகத்தில் இப்படியா?…. ரசிகர்கள் அதிர்ச்சி….!!!!

இந்தியாவின் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சிக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்நிகழ்ச்சி இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பழமொழிகளில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இதில் பங்கேற்கும் பலரும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து விடுகின்றனர்.

அவ்வகையில் ஹிந்தி பிக்பாஸ் 14வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் தான் நடிகை சோனாலி போகட். அரியானா மாநிலத்தில் பிறந்த இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் ஹரியானா மாநிலம் மாதம் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டார். இவர் பிக் பாஸ் 14 நிகழ்ச்சியில் வைல் கார்டு மூலம் கலந்து கொண்டார்.

அதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் தனது ஊழியர்களுடன் கோவாவுக்கு சென்றார். 41 வயதாகும் இவர் நேற்று இரவு திடீரென மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இந்த செய்தி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இவர் இறப்பதற்கு முன்பு தன் வீடியோ மற்றும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

அதில் அவர் மகிழ்ச்சியாக தான் இருந்துள்ளார்.வீடியோ வெளியிட்ட வேகத்தில் அவர் உயிரிழந்து விட்டாரே என்று ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவரின் கடைசி வீடியோவை பலரும் ஷேர் செய்து வரும் நிலையில் அவரது மறைவிற்கு பலரும் தங்கள் இரங்கல்களை தெரிவித்து வருகின்றன…