அடடே… இவங்கதான் ஆண்ட்ரியாவின் சகோதரியா?…. கோலாகலமாக நடந்து முடிந்த தங்கையின் திருமணம்….!!!!

தமிழ் சினிமாவில் நடிகையாகவும் பாடகியாகவும் அசத்தி வருபவர் ஆண்ட்ரியா. இவர் நடித்த ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, ஒரு கல் ஒரு கண்ணாடி, அரண்மனை 1, அரண்மனை 3 உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று தந்தன. இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

இவர் தற்போது மிஸ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் பிசாசு 2 திரைப்படத்தில் நடித்துள்ளார். அப்ப படத்தில் ஒரு சில காட்சிகளில் அண்ட் ஆடை இல்லாமல் நிர்வாணமாக நடித்துள்ளார். இந்தத் திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் வருகின்ற ஆகஸ்ட் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இதனிடையே எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர்,அவ்வப்போது வெளிநாட்டு பயணம் செல்லும் புகைப்படங்களை அடிக்கடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவார். இந்நிலையில் ஆண்ட்ரியாவின் தங்கை நடியாவிற்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது.

அந்த திருமண நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஆண்ட்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து கேப்ஷனில் எனது இளைய சகோதரிக்கு திருமணம் ஆகியுள்ளது, நாடிய மற்றும் செட்ரிக்கு வாழ்த்துக்கள் என்று கூறி பதிவிட்டுள்ளார்.

அவரின் தங்கை வெளிநாட்டை சேர்ந்தவரை மணந்துள்ள நிலையில் புதுமண தம்பதிகளின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்த புகைப்படத்தை இணையத்தில் வைரல் ஆக்கி வருகிறார்கள்.