விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சீரியல்களில் டாப் லிஸ்டில் இருக்கும் சீரியல்தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று வளம் வந்து கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாச கதை காண்போரை நெகிழ வைத்துள்ளது.

இந்த சீரியலுக்கு என்று தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இதில் தற்போது பல திருப்பங்கள் நடந்து சீரியல் விறுவிறுப்பாக ஓடி கொண்டு இருக்கிறது. இந்த சீரியலில் பலர் நடித்து வந்தாலும் கதிர் மற்றும் முல்லை ஜோடி தான் இந்த நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்று தந்தது என்று கூறலாம்.

அதில் கதிர் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் குமரன். முல்லை கதாபாத்திரத்தில் முதலில் பிஜே சித்ரா நடித்து வந்த நிலையில் அவரது திடீர் மரணத்திற்கு பிறகு தற்போது முல்லை கதாபாத்திரத்தில் காவியா நடித்து வருகிறார். முதலில் முல்லை கதாபாத்திரத்தில் செட்டாகாமல் இருந்த இவர் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக அந்த கதாபாத்திரத்தில் ஐக்கியமாகியுள்ளார்.

அதற்குள் அவர் போட்ட பதிவு ஒன்று ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதாவது பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலங்கள் ஸ்டாலின், சுஜிதா மற்றும் குமரன் ஆகியோருடன் எடுத்த புகைப்படங்களை பதிவிட்ட காவியா, அதில் மிஸ் யூ ஆல் என பதிவிட்டுள்ள நிலையில் இவர் தொடரை விட்டு விலகுகிறாரா என்று ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சியில் உள்ளனர்.
