தென்னிந்திய திரை உலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். அன்னையின் இவரது நடிப்பில் சாணி காகிதம் என்ற திரைப்படம் தமிழில் வெளியாகியது. இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து தெலுங்கில் சர்க்காரு வாரி பாட்டா , மலையாளத்தில் வசி ஆகிய இரண்டு படங்களும் தொடர் தோல்வியை சந்தித்தது.

தற்போது மாமன்னன் என்ற திரைப்படத்தை கீர்த்தி சுரேஷ் கைவசம் வைத்துள்ளார். மாரி செல்வராஜ் இயக்கி வரும் இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் வடிவேலு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது.

சமீபகாலமாக சினிமாவில் நல்ல ஒரு இடத்தை பிடிக்க கீர்த்தி சுரேஷ் கிளாமர் ரூட்டுக்கு சென்றுள்ளார். அதற்கான போட்டோ சூட் புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றார். இன்று அவர் முப்பதாவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவரின் பிறந்தநாளுக்கு பல நட்சத்திரங்கள் வாழ்த்து கூறி சமூக வலைத்தளத்தில் கீர்த்தி சுரேஷ் உடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றனர்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் கதிர் ரோடில் நடிக்கும் நடிகர் குமரன் கீர்த்தி சுரேஷ் உடன் நெருக்கமாக எடுத்த புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து உள்ளார் .பல வருடங்கள் இருவரும் நண்பர்களாக இருந்து வரும் நிலையில் தற்போது இந்த செய்தி வெளியாகி உள்ளது.இப்படத்தைப் பார்த்து ரசிகர்கள் என்ன இதெல்லாம் கதிர் என்று கிண்டல் செய்து புகைப்படத்தை வைரலாக்கி வருகிறார்கள்.