விஜய் டிவியில் எத்தனையோ தொகுப்பாளிகள் இருந்தாலும் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்தவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல புகழைத் தேடிக் கொடுத்த நிகழ்ச்சி காபி வித் டிடி. இவர் சின்னத்திரையில் மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.

தற்போது சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள காபி வித் காதல் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார். இந்த படத்தில் ஜெய், ஜீவா, ஸ்ரீகாந்த், ஐஸ்வர்யா தாத்தா மற்றும் சம்யுக்தா உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இந்த படத்தின் போஸ்டர்கள் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

அந்த நிகழ்ச்சியில் டிடி வீல் சேரில் அமர்ந்தபடி பங்கேற்றார்.அவரின் காலில் பிரச்சனை உள்ளதால் வீல்சேரில் அவரை அமர வைத்து ஒருவர் தள்ளிக் கொண்டு வந்தார். அவரின் அர்ப்பணிப்பை பலரும் பாராட்டி வருகிறார்கள். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் அவருடைய ரசிகர்கள் பலரும் டிடிக்கு என்ன ஆச்சு என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.