“பெருசா பேச வந்துட்டாரு, ஓரமா போய் உட்காருப்பா”…. மேடையில் சரமாரியாக சண்டை போட்ட சென்ட்ராயன் – கே.ராஜன்…. பரபரப்பு வீடியோ….!!!

நடன இயக்குனர் தினேஷ் மாஸ்டர் மற்றும் யோகி பாபு நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் லோக்கல் சரக்கு. இந்தத் திரைப்படத்தை இயக்குனர் ராஜ்குமார் இயக்க உபாசனா,இமான் அண்ணாச்சி மற்றும் சென்ராயன் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்களும் படத்தில் நடித்துள்ளனர். டிஸ்கவர் ஸ்டுடியோ சார்பில் இந்த படத்தை தயாரிக்கும் சுவாமிநாதன் ராஜேஷ் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

படத்தின் டைட்டில் மற்றும் பஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகிய நிலையில் படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. இந்த விழாவில் இசையமைப்பாளர் தீனா, இயக்குனர் ஆர்கே செல்வமணி, தயாரிப்பாளர் கே ராஜன், ராதாரவி மற்றும் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். அப்போது மேடையில் பேசிய தயாரிப்பாளர் கே ராஜன், தம்பி ராஜேஷுக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறேன்.

நீங்கள் தற்போது தயாரிப்பாளராகவும் இசையமைப்பாளராகவும் இருக்கிறீர்கள். ஆனால் இதற்கு அடுத்து நீங்கள் படம் தயாரிக்க கூடாது. முதலில் பத்து படத்திற்கு இசையமைத்து பெரிய ஆளா வாங்க, நிறைய சம்பாதிங்கள் என்று பேசினார். அவர் பேசிக் கொண்டிருக்கும் போது குறிப்பிட்ட சென்ராயன், எங்க தயாரிப்பாளர், அவர் எங்க முதலாளி,அவர் படம் பண்ணா தான் எங்களுக்கு வேலை கிடைக்கும் என கூறினார்.

அதனைக் கண்டு ஆவேசம் அடைந்த தயாரிப்பாளர் கே ராஜன், போய் உட்காரு நாங்க வேற வேலை வாங்கித் தர்றோம், உட்காரு தம்பி , உங்க வேலைக்காக நாங்கள் வெளியே போகணுமா, எங்களுக்கு தெரியும், பெருசா எதிர்ப்பு தெரிவிக்க வந்துட்டாரு என கூறினார். இதனிடையே இருவருக்கும் இடையே மேடையில் மோதல் முற்றியது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.