பொன்னியின் செல்வன்….. வேடிக்கையான பதிவை போட்டு கொண்டாடிய அமுல் நிறுவனம்…. இது வேற லெவல்…..!!!!

உலகப் புகழ்பெற்ற மறைந்த எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் பொன்னியின் செல்வன் என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்தினம் பொன்னியின் செல்வன் என்ற படத்தை இரண்டு பாகங்களாக இயக்குகின்றார். இந்தத் திரைப்படத்தில் சீயான் விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, பிரபு, சரத்குமார், அஸ்வின்,கிஷோர் உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அது மட்டுமல்லாமல் ஆதித்ய கரிகாலனாக விக்ரமும், வந்திய தேவனாக கார்த்தியும், ராஜராஜ சோழனாக ஜெயம் ரவியும் நடித்துள்ளனர்.

அதில் நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக திரிஷாவும் தங்களது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.  இந்தத் திரைப்படத்திற்கு ஜெயமோகன் வசனம் எழுதியுள்ளார். ஏ ஆர் ரகுமான் இசையில் லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. இதில் முதல் பாகம் பொன்னியின் செல்வன் 1 அண்மையில் உலகம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Amul – The Taste of India இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@amul_india)

இதனிடையே 4 நாட்களில் பொன்னியின் செல்வன் திரைப்படம் 250 கோடி வசூல் சாதனை படைத்துள்ளது.தமிழகத்தில் மட்டும் 80 கோடி வசூல் செய்துள்ளது. இந்நிலையில் வேடிக்கையான தலைப்புகளுக்கு பெயர் பெற்ற அமுல் பால் பிராண்ட் தற்போது இந்த திரைப்படத்தை அடிப்படையாகக் கொண்டு ஐஸ்வர்யா, திரிஷா, விக்ரம் மற்றும் கார்த்தியின் கதாபாத்திரங்களை டூடுல் பாணியில் குறிப்பிட்டு வெளியிட்டுள்ள பதிவு ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.