குடும்பத்துடன் ஏர்போர்ட் வந்த சூர்யா…. எதற்காக தெரியுமா?…. இணையத்தில் வைரலாகும் புகைப்படம் இதோ…..!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சூர்யா.இவரின் நடிப்பில் அண்மையில் வெளியான பல திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளன. அவ்வகையில் நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு சூரரைப் போற்று திரைப்படம் வெளியானது.

பல்வேறு எதிர்பார்ப்பிற்கு இடையே ஓடிடி தளத்தில் வெளியான இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் விமர்சன ரீதியாகவும் மக்கள் மத்தியில் பாராட்டுகளை அள்ளியது. இப்படத்தில் நடிகர் சூர்யா தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இதனிடையே அண்மையில்  68 ஆவது தேசிய விருது குறித்த பட்டியல் வெளியிடப்பட்டது.அதில்  சூரரைப் போற்று சிறந்த நடிகர், நடிகை, திரைப்படம், திரைக்கதை மற்றும் பின்னணி இசை என ஐந்து விருதுகளை பெற்றுள்ளது.

சிறந்த திரைப்படம்- சூரரைப் போற்று

சிறந்த நடிகர்- சூர்யா
சிறந்த நடிகை- அபர்ணா பாலமுரளி
சிறந்த பின்னனி இசை- ஜி. வி. பிரகாஷ் குமார்
சிறந்த திரைக்கதை- சுதா கோங்கரா

இந்நிலையில் 68 வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா இன்று மாலை டெல்லியில் நடைபெற உள்ளது. அதில் சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது வழங்கப்பட உள்ளது.மட்டுமல்லாமல் சூர்யா பெற உள்ள முதல் தேசிய விருது இது என்பதால் அந்த அந்த விருதை சூர்யா வாங்குவதை பார்க்க அவரின் குடும்பத்தினருடன் சூர்யா டெல்லி சென்றுள்ளார். அப்போது குடும்பத்துடன் விமான நிலையம் வந்த போது எடுத்த புகைப்படம்  ஒன்று தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.