பிரபல தமிழ் நடிகையின் தம்பி பட்டா கத்தியுடன் கைது…. 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு…. திடுக்கிட வைக்கும் பின்னணி….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி கவர்ச்சி நடிகைகளின் ஒருவராக வலம் வருபவர் தான் பாபிலோனா. இவர் தற்போது தனது குடும்பத்துடன் சென்னை விருகம்பாக்கம் பகுதியில் வசித்து வருகின்றார். இவரின் தம்பி விக்கி என்ற விக்னேஷ் குமார் சென்னை சாலிகிராமம் பகுதியில் அவரின் பாட்டியின் வீட்டில் வசித்து வருகின்றார். போதைக்கு அடிமையான இவர் பல வருடங்களாக எந்த ஒரு வேலைக்கும் செல்லாமல் போதைக்காக காசு கேட்டு பல தகராறுகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.

 

கடந்த வருடம் திடீரென அவரின் வீட்டிற்குள் புகுந்த சில மர்ம நபர்கள் அவரை சரமாரியாக கத்தியால் தாக்கியதில் பலத்த காயமடைந்த விக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவரை தாக்குவதற்கு முக்கிய காரணம் போதையில் அடிக்கடி அந்த பகுதியில் உள்ளவர்களிடம் அவர் தகராறு ஈடுபட்டு வந்ததுதான். அது மட்டுமல்லாமல் விக்கி போதையில் காவல் அதிகாரி ஒருவரை கன்னத்தில் அறைந்ததால் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாபிலோனாவின் தம்பி ஆறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் ஒன்று வைரல் ஆகி வருகிறது. பல அடாவடி சம்பவங்களில் மது போதையில் ஈடுபட்டு வந்த நிலையில் விக்னேஷ் மீது கொலை மிரட்டல் மற்றும் ஆபாச பேசுதல் உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில் அவரை தீவிரமாக தேடி கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ஒரு பட்டா கத்தியும் கார் ஒன்றையும் போலீசார்பரிந்துரை செய்துள்ள நிலையில் தற்போது இந்த தகவல் இணையத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.