தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சினேகா. தனது சிரிப்பின் மூலம் புன்னகை அரசியாக ரசிகர்களின் மனதை கவர்ந்தவர். தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் இவர் நடித்துள்ளார். இதனிடையே சினிமாவில் பிரபலமான நடிகரான பிரசன்னா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

2012 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு விஹான் என்ற மகனும் அத்யாந்தா என்ற மகளும் உள்ளனர். தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நட்சத்திர ஜோடிகளாக திகழ்ந்து கொண்டிருப்பவர்கள் சினேகா மற்றும் பிரசன்னா. இவர்கள் இருவரும் எப்போதுமே சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார்கள்.

அவ்வப்போது தங்கள் வீட்டில் நடக்கும் சிறிய விசேஷங்கள் முதல் பெரிய விசேஷங்கள் வரை அனைத்தையும் வீடியோ மற்றும் புகைப்படங்களாக இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள். இந்நிலையில் நடிகர் பிரசன்னா தனது 40 ஆவது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார்.அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து திரை பிரபலங்கள் பலரும் பதிவுகளை வெளியிட்டு வருகிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் பிரசன்னா அவரின் பிறந்தநாளை பாட்டி வைத்து கொண்டாடினார். அதில் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்ட நிலையில் அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் தனது கணவருக்கு வாழ்த்து சொல்ல மனைவி சினேகா ஒரு ரொமாண்டிக் போட்டோவை இன்ஸ்டால் பதிவிட்டுள்ளார். தற்போது வைரலாகி வருகிறது.