நடிகர் சிம்புவுக்கு திருமணம்…. மணப்பெண் எந்த ஊர் தெரியுமா?…. விரைவில் டும் டும்…..!!!!

தமிழ் சினிமாவில் நடிப்பு, இயக்கம் மற்றும் இசையமைப்பு என பன்முகம் கொண்ட கலைஞராக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் டி ராஜேந்தர். இவருக்கு சளைத்தவர் இல்லை இவரின் மகன் சிம்பு. இவர் சிறு வயதிலிருந்தே சினிமாவில் நடித்து வருகின்றார். தனது தந்தையைப் போலவே அனைத்து திறமைகளையும் கொண்ட கலைஞராக சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

கடந்த இரண்டு வருடங்களில் சினிமாவில் சிம்பு பெரும் வளர்ச்சியை கண்டுள்ளார். உடல் எடையை கூட்டி பல படங்களிலும் உடல் எடையை யாரும் நினைத்து பார்க்காத அளவிற்கு குறைத்து சில படங்களிலும் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். அவர் அண்மையில் நடித்த மாநாடு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

மாநாடு திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிம்புவுக்கு அடுத்தடுத்து பல வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.அவரின் நடிப்பில் தற்போது வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படம் உருவாகியுள்ள நிலையில் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி இந்த திரைப்படம் வெளியாக உள்ளது. இதனைத் தவிர தற்போது பத்து தல திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இவ்வாறு பல்வேறு படங்களில் கமிட் ஆகி பிசியாக இருக்கும் சிம்புவுக்கு வயது 40 நெருங்கி உள்ள காரணத்தால் அவருக்கு விரைவில் திருமணம் செய்து வைக்க அவரின் பெற்றோர்கள் முடிவு செய்துள்ளனர்.அதாவது தனது மகன் சிம்புவுக்கு பெண்பார்க்கும் வேலையில் அவரது பெற்றோர் மற்றும் தங்கை தீவிரமாக ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மயிலாடுதுறையை சேர்ந்த பெண்ணாக இருக்க வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக உள்ளனர் . இதன் மூலமாக நடிகர் சிம்புவுக்கு விரைவில் திருமணம் ஆக உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.