வெண்ணிற உடையில் புதிய லுக்கில் கலக்கும் “ப்ரேமம்” பட நடிகை…. இணையத்தில் வைரலாகும் ஃபோட்டோ ஷூட்…..!!!!

மலையாளத்தில் வெளியான ப்ரேமம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். இந்தத் திரைப்படம் மலையாளத்தில் வெளியானாலும் உலகம் முழுவதும் மாபெரும் அளவில் வெற்றி பெற்றது. இந்தப் படத்தில் நாயகியாக அறிமுகமான அனுபமா பரமேஸ்வரன், தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான கொடி படத்தில் நடித்ததன் மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானார்.

ஆனால் அதற்குப் பிறகு பட வாய்ப்புகள் எதுவும் தமிழில் அதிக அளவு கிடைக்காத நிலையில் தெலுங்கு மற்றும் கன்னடாம உள்ளிட்ட மொழி படங்களில் நடிக்க தொடங்கினார். தெலுங்கில் இவர் நடித்த தேஜ் ஐ லவ் யூ, உன்னடி ஒகடே சிந்தகி உள்ளிட்ட படங்கள் தொடர்ந்து தோல்வியை தழுவியதால், இவருடைய கவர்ச்சிக்கு சில படங்கள் கைவசம் உள்ளன.

இவர் நடிப்பில் தமிழில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தள்ளி போகாதே. இதனைத் தொடர்ந்து தெலுங்கில் இவர் நடித்துள்ள கார்த்திகேயா -2 திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 12ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருவார்.

அவ்வகையில் கார்த்திகேயா 2 படத்தின் ரிலீஸை ஒட்டி நேற்று முன்தினம் பிரமோஷன் விழாவில் புதிய லுக்கில் வெண்ணிற ஆடையில் போட்டோ சூட் நடத்தி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவர் இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள் பலரும் லைக் செய்து இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.